புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தரப் பரீட்சை தொடர்பில் செவ்வாய்கிழமை தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தரப் பரீட்சை தொடர்பில் செவ்வாய்கிழமை தீர்மானம்

(இரா. செல்வாஜா)

கல்விப் பொதுத் தராதர உயர் தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய பரீட்சைகளை நடத்தும் திகதி தொடர்பாக செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து நாளையதினத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய தேர்தல்கள் திணைக்களம் திகதியை அறிவித்த பின்னர் அதற்கேற்றால் போல் இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் திகதி குறித்து தீர்மானிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார.

செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித உட்பட திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இம்முறை கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற 3 இலட்சத்து 63 ஆயிரத்து 278 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment