தேர்தல் திகதி இவ்வாரத்திற்குள் அறிவிக்கப்படும், வேட்பாளர் இலக்கம் நாளை வர்த்தமானியில் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, June 8, 2020

தேர்தல் திகதி இவ்வாரத்திற்குள் அறிவிக்கப்படும், வேட்பாளர் இலக்கம் நாளை வர்த்தமானியில் வெளியீடு

பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளையதினம் (09) வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று (08) அறிவிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஆனால், புதிய திகதியை அறிவிப்பதற்கு முன்னர் பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளதாக, இன்று (08) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 4 முக்கிய தீர்மானங்களை ஆணைக்குழு எடுத்துள்ளது.

புதிய தேர்தல் திகதி இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

வேட்பாளர்களின் விருப்பு இலக்கத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய, சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் செலவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளரை, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர். 

கொரோனா பரவல் நிலை காரணமாக, பொதுத் தேர்தலுக்கான செலவு ரூபா 06 பில்லியனிலிருந்து 09 பில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment