எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் அமைப்பினால் 176 ஆவது உலக வை.எம்.சீ.ஏ. தினம் சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது.
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் அமைப்பின் (வை.எம்.சீ.ஏ.) தலைவர் ஞா.விஜயதர்ஷன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்த வகையில் கொரோனா அச்சத்தை குறைப்போம் அவதானமாக செயற்படுவோம் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதில் வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதி மற்றும் வியாபார நிலையங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு சென்று வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் அமைப்பின் உறுப்பினர்களால் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment