பொலிஸ் நிலையத்திற்கு முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

பொலிஸ் நிலையத்திற்கு முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களுக்கு எச்சரிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களை பொலிஸார் திருப்பி அனுப்பி வைக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் மற்றும் சான்றிதழ்கள், பதிவுகள் செய்வதற்கு வரும் மக்கள் முகக் கசவம் அணிந்து கைகளை கழுவி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொலிஸ் நிலையத்திற்கு வரும் அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்து வர வேண்டும். ஆனால், முகக் கவசம் அணியாமல் வருகை தந்த பொதுமக்கள் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

அத்தோடு, முகக் கவசங்களை அணியாமல் வருகை தந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும், முகக் கவசம் அணிந்து பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் பணிப்புரை எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment