கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மத்திய குற்ற ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
26, 27 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் கடவத்தை மற்றும் பிலியந்தல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை நாளையதினம் (04) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய குற்ற ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment