கணக்கில் வராத மூவாயிரம் கொரோனா உயிரிழப்புகள் - இறப்பு தரவுகளை மறுகட்டமைப்பு செய்த சிலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 21, 2020

கணக்கில் வராத மூவாயிரம் கொரோனா உயிரிழப்புகள் - இறப்பு தரவுகளை மறுகட்டமைப்பு செய்த சிலி

சிலி நாட்டில் ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து அரசின் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 இறப்புகள் தற்போது சேர்க்கப்பட்டு தரவுகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், சிலி நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரத்து 75 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அந்நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் அரசின் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழப்பவர்களை கணக்கிடும் நடைமுறையில் சிலி அரசு மாற்றம் கொண்டுவந்தது. மேலும், வைரசால் ஏற்கனவே உயிரிழந்து அரசின் இறப்பு தகவல் பட்டியலில் இடம்பெறாதவர்களின் எண்ணிக்கை தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 

அதில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்து அரசின் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 இறப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, கொரோனா இறப்பு தரவுகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு இந்த உயிரிழப்புகள் அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டது. 

இதன் மூலம் ஏற்கனவே உள்ள 4 ஆயிரத்து 75 உயிரிழப்புகளுடன் தற்போது மறுகட்டமைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட 3 ஆயிரத்து 69 இறப்புகள் சேர்க்கப்பட்டது. 

இதனால் சிலி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment