தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்

கல்வி வளர்ச்சி தொடர்பான தூர நோக்கற்ற அரசியல் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தமையினாலேயே வடக்கின் கல்வி வீழச்சியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள வடக்கின் கல்வி நிலையினை மேம்டுத்துவது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடயிலான சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள TCT மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த எமது ஆட்சிக் காலங்களில் குறிப்பாக கடும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட நாம் முன்னோக்கிக் கொண்டு சென்ற கல்வி நிலையைக்கூட இதர தமிழ் தலைமைகள் இன்று பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.

வடக்கு மாகாண சபையை கொண்டு வடக்கின் கல்வித் துறையை எத்தனையோ துறைகளில் வளம்மிக்கதாக மாற்றியமைப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்கியிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது கல்வி கற்று தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கலாம். அல்லது அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்து வேலையற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிருக்கலாம்.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தை தமிழ் தேசியம் பேசி வடக்கு மாகாண சபையை கைப்பற்றிய தரப்பினர் இழக்கச் செய்துவிட்டனர். ஆனால் நாம் கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் மக்களுக்கானதாகவே உருவாக்கி காட்டியிருந்திருக்கின்றோம்.

இத்தகைய மாற்றங்களை மேலும் உருவாக்க எமது கரங்களுக்கு வருங்காலத்தில் அரியல் பலத்தை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. அத்துடன் பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண எம்மிடம் சிறந்த பொறிமுறை உண்டு. அதனை நிறைவேற்றும் ஆற்றலும் ஆளுமையும் எம்மிடம் உண்டு.

அத்தகைய ஒரு மாற்றத்தை எமது மக்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் நிச்சயமாக கல்வி தொழில்வாய்ப்புகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எம்மால் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment