இலங்கையில் இருந்து 700 இந்தியர்களுடன் இன்று பயணிக்கும் ஜலஸ்வா - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

இலங்கையில் இருந்து 700 இந்தியர்களுடன் இன்று பயணிக்கும் ஜலஸ்வா

பல்வேறு காரணங்களுக்காக இலங்கைக்கு வருகை தந்து தாய் நாட்டுக்கு திரும்ப முடியாதிருக்கும் 700 இக்கும் அதிகமான இந்தியர்களுடன் இன்று ஜூன் மாதம் முதலாம் திகதி ஜலஸ்வா கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கிச் சற்று நேரத்தில் பயணிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்தள்ளது.

“வந்தேபாரத்’’ செயல்நோக்கின் கீழ் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய கடற்படைக்கப்பல்கள் சேவையில் அமர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் “சமுத்ரசேது” நடவடிக்கையின் அடுத்த கப்பற் பயணமாக இது அமையவுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலையில் இலங்கைகக்கு வருகை தந்துள்ள ஜலஸ்வா கப்பல், இவ்வாறு இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்படவுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தினை நோக்கிய இக்கப்பலின் இரண்டாவது பயணமாகவும் இது அமைந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய பிரஜைகள் இந்தகப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தேவைகளின் அடிப்படையில் பயணத்திற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குறித்த கப்பல், சமுத்ரசேது நடவடிக்கையின் கீழ் மாலைதீவிலிருந்து 1500 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment