சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 291 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியிருந்த குழுவினரே இன்று (02) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று மாலை 4.15 மணிக்கு, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 303 எனும் விசேட விமானம் மூலம் இக்குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலைய வளாகத்தில் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment