மலேசியாவிலிருந்து 150 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

மலேசியாவிலிருந்து 150 பேர் இலங்கை வருகை

இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 150 பேர் இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 319 எனும் விசேட விமானம் மூலம், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவ்விமானப் பயணிகள் இன்று காலை 8.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகளில், வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த ஒரு குழுவினரும், உயர் கல்விக்காக புறப்பட்டுச் சென்றிருந்த மாணவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment