இலங்கை மாணவர்கள் 1,000 பேருக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

இலங்கை மாணவர்கள் 1,000 பேருக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள்

இலங்கை - பாகிஸ்தான் உயர்கல்வி கூட்டுறவு திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு 1,000 அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்களை பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழு வழங்கவுள்ளது.

இலங்கை மாணவர்கள் பாகிஸ்தான் சென்று அங்கு பொறியியல், விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞான துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பில் ஈடுபடலாம்.

முழுமையான வகுப்பு கட்டணம், தங்குமிட கொடுப்பனவு, கல்விக் கொடுப்பனவு மற்றும் ஒரு தடவைக்கான திரும்பிவரும் விமானக் கட்டணம் ஆகியவை இந்த புலமைப் பரிசில் உள்ளடங்கும். எந்தவொரு பின்னணியிலுள்ள மாணவர்களும் இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம் இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்குமாறு மாணவியர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அலரி மாளிகையில் நேற்று (26) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) மொஹமட் சாத்காட்டாக் (Muhammad SaadKhattak) மேற்படி புலமைப் பரிசில் தொடர்பான மேலும் விளக்கமளித்தார்.

அதேநேரம் கொழும்பில், வீதி நூலகங்கள் ஆரம்பிக்கும் திட்டம் பற்றியும் தூதுவர் இந்த சந்திப்பின்போது விபரித்தார். இந்த யோசனையை வரவேற்ற பிரதமர் நாட்டின் ஏனைய மாகாணங்களில் கல்விச் சேவைகள் பெறுவதில் சிரமம் அனுபவிக்கும் மாணவர்களுக்கான நடமாடும் நூலகம் அமைப்பது பற்றி பாகிஸ்தான் தூதரகம் கருத்திற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment