கருணா மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

கருணா மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மீது சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்த குற்றச்சாட்டின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் (Michelle Bachelet,) அலுவலகம் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளது.

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் யுத்த காலத்தில் புரிந்த குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவதை கவனத்தில் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்சேர்ப்புச் செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக கருணா அம்மானை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment