இம்மாதம் 04ஆம், 05ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், அத்தினங்களில் கொழும்பு மெனிங் சந்தை மூடப்படவுள்ளதாக, மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த இரு தினங்களில், ஒரு தினத்தில் மெனிங் பொதுச் சந்தையில் தொற்று நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் தொற்று நீக்கம் செய்வதற்காக இச்சந்தையானது, ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டாலும், இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மெனிங் பொதுச் சந்தை திறந்திருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment