ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, May 16, 2020

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான அமர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உலகையே அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்திலும் நுழைந்துள்ளது.

அங்கு பணியாற்றும் ஐ.நா. ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அனைத்து நடவடிக்கைகளையும் தொலைத்தொடர்பு மூலம் மேற்கொள்ள ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஐ.நா. சபையில் தலைமை அலுவலகத்தில் நேரடி சந்திப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் நீண்ட காலமாக நடந்து வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான அமர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad