கொரோனா அப்டேட் - அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

கொரோனா அப்டேட் - அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் நேற்று 99 ஆயிரத்து 405 பேர் புதிதாக பாதிகப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது. 25 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17 லட்சத்து 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதேபோல் தினசரி பலி எண்ணிக்கை சதவீதம் தற்போது அதிகரித்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,595 பேர் பலியாகியும், 26 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 14 லட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்ட மாகாணமாக நியூயார்க் உள்ளது. அங்கு இதுவரை 27,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் தினசரி பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபடி இருந்தது. 1000 பேர் பலியாகியும் புதிதாக 18 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற நிலையில் குறைந்தபடியே இருந்தது. ஆனால் மீண்டும் அங்கு பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. நேற்று புதிதாக 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.

தற்போது நிலவரப்படி நியூயோர்க் மாகாணத்தில் பலி மற்றும் பாதிப்பு கணிசமான அளவுக்கு குறைந்திருக்கிறது. இந்த நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள மத்திய நியூயோர்க், நார்த் கண்ட்ரி, பிங்கர்லேக், தெற்கு டயர், மோஹவக் ஆகிய 5 பகுதிகளில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நியூயோர்க் சிட்டி உள்பட மற்ற பகுதிகளில் மே 28ம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாகவும் அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குயூமோ தெரிவித்துள்ளார்.

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு அந்த வைரஸ் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 824 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 817ஆக உயர்ந்தது.

அதேபோல் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிரேசிலில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையில் அந்த நாடு இத்தாலி, இங்கிலாந்தை முந்துகிறது.

ரஷ்யாவிலும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. நேற்று 10 ஆயிரத்து 598 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் நேற்று 113 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 2418பேர் பலியாகியும், 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட் டும் உள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா பலி 34 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நேற்று 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் (மொத்த பலி 31,610) நேற்று 242 பேரும், ஸ்பெயினில் (மொத்த பலி 27,459) 138 பேரும், பிரான்சில் (மொத்த பலி 27,529) 104 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பெல்ஜியத்தில் கொரோனா பலி 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மெக்சிகோவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. அங்கு 2 நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 477 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதேபோல் கனடாவில் 5ஆயிரத்து 662 பேரும், ஈரானில் 6ஆயிரத்து 902 பேரும், நெதர்லாந்தில் 5 ஆயிரத்து 643 பேரும், துருக்கியில் 4 ஆயிரத்து 55 பேரும் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் நாட்டில் நேற்று கொரோனா வைரசுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. அங்கு இதுவரை 537 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் நேற்று புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே சீனாவில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100-க்குள் வந்துள்ளது. 91 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு தடுப்பூசிகளை பரிசோதனை செய்து வருகிறது.

இதற்கிடையே 5-வது கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யபடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment