மெக்சிகோவில் சாராயம் குடித்த 35 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

மெக்சிகோவில் சாராயம் குடித்த 35 பேர் பலி

ஊரடங்கு காரணமாக மெக்சிகோவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விஷ சாராயம் குடித்த 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அதன் அண்டை நாடான மெக்சிகோவில் கொரோன வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக மெக்சிகோவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுபிரியர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.

இந்த நிலையில் பியூப்லா மாகாணத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் மோரலோஸ் மாகாணத்தில் ஒரு பெண் உட்பட 15 பேர் விஷ சாராயம் குடித்ததால் பரிதாபமாக இறந்தனர்.

முன்னதாக கடந்த மாத இறுதியில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் தரக்குறைவான மது அருந்திய 25 பேரும், அகான்சே மாகாணத்தில் எரிசாராயம் குடித்த 7 பேரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment