பொத்துவில் பிரதேச அண்மைக்கால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொத்துவிலுக்கு கள விஜயம் ! - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

பொத்துவில் பிரதேச அண்மைக்கால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொத்துவிலுக்கு கள விஜயம் !

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அடங்கிய குழுவினர் கடந்த 14ம் திகதி பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹா விகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்க்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதை அறிந்த மக்கள் சந்தேகமும், பதட்டமும் அடைந்தனர். இது தொடர்பில் நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பொத்துவில் பிரதேசத்திற்கு நேரடியாக சென்று களநிலவரங்களை ஆராய்ந்து கொண்டார்.

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாஸித், தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினரை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தித்து இதுசம்பந்தமான விடயங்களை ஆராய்ந்ததுடன் மக்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் தீர்த்துவைப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரசின் மேல்மட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வை பெற்றுக்கொடுப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் (சத்திப்பொல) வாராந்த சந்தையை கொண்டு முஸ்லிம்-தமிழ் மக்களினிடையே இனமுரண்பாட்டை உண்டாக்க எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதுடன் விநாயகமூர்த்தி முரளிதரனின் இனவாத போக்கை கண்டித்தியத்துடன் இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொத்துவில் கிளை தலைவர் மௌலவி ஆதம் லெப்பை அவர்களை சந்தித்து சத்திபோல மற்றும் தொல்பொருள் காணிப்பிரச்சினை தொடர்பாக நீண்ட நேர கலந்துரையாலில் ஆலோசனைங்களையும் பெற்று கொண்டார்.

அதைதொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான மஜீட் அஹமட் அவர்களையும் சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இந்த சந்திப்புக்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாஸித், பிரதேச சபை உறுப்பினர் ஹியாஸ், சட்டத்தரணி பைஸால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான சகோதரர் வசூர்கான், சகோதரர் ரிஷான், சகோதரர் முபா, சகோதரர் பயாஸ், சகோதரர் ஜௌபர், சகோதரர் மாபீர் உட்பட மேலும் பலர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad