அரசாங்கத்துடன் இணைவது குறித்து ரவி கருணாநாயக்க ஆர்வம் - எங்களின் நோக்கம் பொதுஜன பெரமுனவை தோற்கடிப்பதே - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

அரசாங்கத்துடன் இணைவது குறித்து ரவி கருணாநாயக்க ஆர்வம் - எங்களின் நோக்கம் பொதுஜன பெரமுனவை தோற்கடிப்பதே

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பேயில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கூட இதற்கான வாய்ப்பிலலை என தெரிவித்துள்ள அவர் வாக்காளர்கள் அதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறித்து சாதகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்தால் தான் அந்த கட்சியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

ஆனால் எங்களின் நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தோற்கடிப்பதே என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஐக்கி தேசிய கட்சிக்கு முற்றாக எதிரானவர்கள் இல்லை ஆனால் கட்சியை தற்போது நிர்வகிப்பவர்களுடன் இணைந்து செயற்பட நாங்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் எவரும் தங்கள் வேட்புமனுவை விலக்கிவிட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய விரும்பவில்லை, நாங்கள் வேட்புமனுவை தனியாக கையளித்துள்ளோம் ஐக்கிய தேசிய கட்சியும் அவ்வாறே செய்துள்ளது இதன் காரணமாக இந்த சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது என தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுகாதார அதிகாரிகளினதும் நோயாளிகளுடன் பணியாற்றிய படையினரிதும் அங்கீகாரம் கிடைத்தாலே தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment