இலங்கை எதிர்கொண்டுள்ள சூறாவளி அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

இலங்கை எதிர்கொண்டுள்ள சூறாவளி அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கை எதிர்கொண்டுள்ள சூறாவளி அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நண்பகல் நிலவிய வானிலையையடுத்து இந்த அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று (16) முற்பகல் 05.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 10.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.00 E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. 

இது இன்று (16) விரைவாக ஒரு சூறாவளியாக விருத்தியடைவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது ஆரம்பத்தில் 17ஆம் திகதி வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment