நவீன விஞ்ஞானபூர்வ சுகாதாரக் கொள்கை அடிப்படையில் இலங்கையை கட்டியெழுப்புவது குறித்து யுனிசெப் - சஜித்திற்கு இடையில் பேச்சு - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

நவீன விஞ்ஞானபூர்வ சுகாதாரக் கொள்கை அடிப்படையில் இலங்கையை கட்டியெழுப்புவது குறித்து யுனிசெப் - சஜித்திற்கு இடையில் பேச்சு

(நா.தனுஜா) 

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி ரிம் சுடொனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது நவீன விஞ்ஞானபூர்வ சுகாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையைக் கட்டியெழுப்புவது குறித்து கலந்துரையாடப்பட்டது. 

நோய் நிவாரணம், நோய்க்கான சிகிச்சைமுறைகள், தேசிய போசணை கொள்கை, சிறுவர் சுகாதாரம், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய வகையில் சுகாதாரக் கொள்கையைத் தயாரிப்பதற்கான பொறுப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளடங்கலாக துசிதா விஜேமான்ன, காவிந்த ஜயவர்தன அடங்கிய குழுவினரிடம் ஒப்படைக்ககப்பட்டது. 

விஞ்ஞானபூர்வ அடிப்படையில், உரிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடனான முறையான கொள்கைத்திட்டமொன்றை யுனிசெப் அமைப்பின் யோசனைப்படி தயாரிப்பதற்கு இதன்போது சஜித் பிரேமதாஸ ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad