5000 ரூபாவை வழங்க முடியாமைக்கும் எதிர்க்கட்சியினரே காரணம் என்கிறது அரசாங்கம் : ராஜபக்ஷகர்களுடன் டீல் செய்தவர்தான் நவீன் திஷாநாயக்க - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

5000 ரூபாவை வழங்க முடியாமைக்கும் எதிர்க்கட்சியினரே காரணம் என்கிறது அரசாங்கம் : ராஜபக்ஷகர்களுடன் டீல் செய்தவர்தான் நவீன் திஷாநாயக்க

(செ.தேன்மொழி) 

ஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சியின் தலையீட்டின் காரணமாகவே வழங்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக காண்பித்து அரசாங்கம் தப்பிக்கொள்ள முயற்சித்துவருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன, இதனை முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும், அரசியல் செயற்பாடாக இல்லாமல் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்குமாறே தாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிவாரணத்தை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிலவற்றின் தலையீட்டின் காரணமாகவே பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்று காண்பித்துக் கொண்டு அரசாங்கம் அதிலிருந்துக் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றது. 

தேர்தல்கள் ஆணையாளருக்கு நாங்கள் அளுத்தம் தெரிவித்ததின் காரணமாகவே இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆளும் தரப்பினர் காண்பிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. அதனை அரசியல் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டாம் என்றே தெரிவித்தோம். அரச ஊழியர்களை கொண்டு இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் யாருமே எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள். 

இதேவேளை இந்த 5000 ரூபாய் நிதியை 72 இலட்சம் குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் 78 இலட்சம் குடும்பங்களே இருக்கின்ற நிலையில் இதில் வசதி படைத்த குடும்பங்கள், நிரந்தர வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் அரச ஊழியர்களைக் கொண்ட குடும்பங்கள் என பாகுப்படுத்தப்பட்டு இந்த நிவாரணங்கள் வகுக்கப்பட்டு வழங்கவில்லையா?, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். 

மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் எம்மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியை கைப்பற்றியவர்கள், தாற்போது பெரும் நிதி மோடிகளை முன்னெடுத்து வருவதாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளன. 

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டு மக்களை மீட்பதற்காக ஏனைய நாடுகளில் அரச திறைசேரியிலிருந்து போதியளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மக்களுக்கு சௌபாக்கிய வாழ்கையை அமைத்துக் கொடுப்பதாக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் 0.21 சதவீத நீதியையே ஒதுக்கிட்டுள்ளனர். 

இன்று நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமை தொடர்பில் மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது குவிந்துகிடந்த செருப்புகளின் நிலைமையை பார்த்தபோதே தெரிந்துகொள்ள கூடியதாக இருந்தது. ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் இலங்கை வரலாற்றில் எப்போதும் இடம்பெறாத ஒரு வறுமைக் கோட்டினை ஏற்படுத்தியுள்ளனர். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியையும், எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் ராஜபக்ஷகர்களுடன் டீல் செய்து கொண்டிருந்ததன் காரணமாகவே சஜித் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

இதற்கு நாங்கள் எதிர்ப்பபு தெரிவிப்பதுடன், நவீன் திஷாநாயக்கவை கண்ணாடியின் முன்னர் நின்று அவரது முகத்தை பார்த்து யார் ராஜபக்ஷாக்களுடன் டீல் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வினவிப்பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 17 பேரையும் அழைத்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து டீல் செய்து ஐ.தே.க.வின் வீழ்ச்சிக்கு வழியமைத்த அவர் இன்று எம்மீது குற்றஞ்சாட்டி வருகின்றார். அரசாங்கத்திடம் டீல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை என குறி ப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad