இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் - குருநாகலில் பயிர்கள் நாசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் - குருநாகலில் பயிர்கள் நாசம்

வடமேல் மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன.

வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளன. கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்றும் அவை உள்ளூர் வெட்டுக்கிளிகளே என்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரியது மற்றும் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற பலவீனமான உணவுப் பாதுகாப்பு உள்ள நாடுகளில் பயிர்களை அழித்துள்ளன.

பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் அழிவுகரமான புலம்பெயரும் பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. அவைகள் ஒவ்வொரு நாளும் 150 கிலோ மீற்றர் காற்றோடு பறந்து சுமார் மூன்று மாதங்கள் உயிர்வாழக் கூடியன எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment