வெனிசுலாவின், குவானாரே சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 17 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட வெனிசுலாவின் இராணுவ அறிக்கையில், வெளிசுலாவின் குவானாரேயினல் உள்ள லாஸ் லானோஸ் சிறைச்சாலையில் கைதிகளிடத்தில் பொது ஒழுங்கானது சீர் குலைந்தமையினால் இந்த கலவரம் ஏற்பட்டுள்ளளது. இதன் விளைவாக 17 பேர் உயிரிந்துள்ளதுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலவரத்துக்கு இராணுவம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.
எனினும் கைதிகளின் உரிமைக் குழுவினர், கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் உணவு கொண்டு வருவதற்கு தடை விதித்தன் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரேனா வைரஸ் பரவலின் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாகவே இவ்வாறு சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கைதிகளுக்கான போதுமான தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லை என கூறியுள்ள வெனிசுலா சிறைச்சாலையின் அதிகாரிகள், அவர்களில் பெரும்பாலானோர் ஊட்டச் சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் காச நோய் கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
கலவரத்தின் பின்னர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து கைதிகள் வெளியேற முயன்றபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிறைச்சாலை இயக்குனர் முதுகில் காயமடைந்த நிலையிலும் மற்றும் கையெறி குண்டு வெடிப்பால் காயமடைந்த ஒரு லெப்டினென்ட் ஆகியோர் அடங்குவர்.
இதேவேளை இந்த அனர்த்தத்தில் வெனிசுலா சட்டமன்ற உறுப்பினர் மரியா மார்டினெஸ் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment