பாதுகாப்பு அமைச்சகம் 11 இராணுவ அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

பாதுகாப்பு அமைச்சகம் 11 இராணுவ அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது

கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் 11 இராணுவ அதிகாரிகளை வெள்ளிக்கிழமை முதல் பணி நீக்கம் செய்துள்ளது. 

ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், நீதிவான் மற்றும் இராணுவத்தின் தகவல்களை உளவு பார்த்த குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இவர்களை கொலம்பிய பாதுகாப்பு அமைச்சகம் பணி நீக்கம் செய்துள்ளது. 

அத்துடன் இந்த உளவு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக சந்தேககிக்கப்படும் ஜெனரல் ஒருவர் தாமாக முன் வந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜெனரலின் பெயர்கள் எவற்றையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. 

கொலம்பியாவின் 'Semana' என்ற செய்தி இதழானது உளவு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டதன் பின்னர் கொலம்பிய நாட்டின் சட்டா மா அதிபர் இது தொடர்பான விசாரணைகளை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்திருந்தார். 

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையான 'FARC' யின் இரகசிய தகவல்கள், அண்மைய ஆண்டுகளில் இராணுவம் சம்பந்தப்பட்ட ஹேக் செய்யப்பட்டுள்ளமை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 130 க்கும் மேற்பட்டவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளளமை, அத்துடன் அவர்களது குடும்பங்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment