சமூகத்தின் மேன்மைக்காகத் துணிவோடு செயற்பட்ட தலைவர் ஆறுமுகன் தொண்டமான் - முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் அனுதாபம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

சமூகத்தின் மேன்மைக்காகத் துணிவோடு செயற்பட்ட தலைவர் ஆறுமுகன் தொண்டமான் - முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் அனுதாபம்

“சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் தொடர்ந்து சந்தித்துநிற்கும் இவ்வேளையில் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் மேன்மைக்காக துணிவோடு பெரும் பணியாற்றிவரும் அரசியல் தலைமைகளை இயற்கை காவு கொள்வது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வாகும். இதனைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இழப்பாகும். அவரது பிரிவால் மிக துயருற்றிருக்கும் அனைவருக்கும் இவ்வேளையில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு தமது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறாhர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட். அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது.

தெற்காசியாவில் மிகப்பெரிய தொழிற்சங்கம் என்ற பெருமைக்குரிய நிறுவனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். இதனை நிறுவி - கட்டி அமைத்து மலையகத் தொழிலாளர் வர்க்கம் என்ற ஒரு சமூகத்தை உலகுக் காட்டிய பெருமை மலையகத் தந்தை எனப் போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு உரியதாகும்.

இத்தகைய வரலாற்று பெருமைக்குரிய அவரது அடிச்சுவட்டில் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் என்ற கோட்பாடுகளுக்கு அமைய மலையகச் சமூகத்தை வழி நடத்தி வந்தவர் அவரது பேரனான அமரர் ஆறுமுகன் தொண்ட மான் என்றால் மிகையாகாது.

எமது தலைவர் மாமனிதர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப்; அவர்களுடன் மிக நெருங்கிய உறவை கொண்டிருந்த அவர் 19994-2000 ஆண்டு கால பகுதிகளில் சிறுபான்மை மக்களின் மேன்மைக்காக ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸம் இலங்கை தொழிலார் காங்கிரஸ_ம் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற விரும்பம் கொண்டு இயங்கி வந்தார் என்பதையும் நான் அறிவேன்.

தனது சமூகத்தின் மேன்மைக்காக எந்த தீர்மானத்தையும் துணிவோடு எடுத்து அதற்காக தனது வாழ்நாளை ஆர்பணித்த தலைவர்களில் ஓருவராக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நான் பார்க்கிறேன். அவரது இறுதி கனத்தில் கூட தனது சமூகத்தின் மேன்மைக்காக அவர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து பேசிவிட்டு வந்திருந்தார் என்பதை அறியும்போது மனது கனக்கின்றது.

அவரது பிரிவு மலையகச் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தப் பிரிவால் பெரும் வேதனைச் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் தொழிற்சங்க சகாக்கள். அரசியல் தோழர்கள் மற்றும் அபிமானிகள் ஆதரவாளர்கள் அனைவருடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் & எம்.எச்.எம்.இம்றான்

No comments:

Post a Comment