இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் - கலாநிதி ஜனகன்...! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் - கலாநிதி ஜனகன்...!

“நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும் பணிச்சூழலில் தொழிலாற்றுவோரைப் பாதுகாக்கும் முறையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும். இளைஞோரைப் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் புதிய இணைப்புகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர், யுவதிகளின் தொழில் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன.

“இன்று கொழும்பு மாவட்டத்தில் பல இளைஞர், யுவதிகள் பொருள்களை விநியோகிப்பவர்களாக மற்றும் வாகன சாரதிகளாகத் தொழிலாற்றுகிறார்கள். இவர்களின் தொழில் பாதுகாப்புக் கேள்விக்குறியாகவே இன்றும் உள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத்தில் இவ்வாறு நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும் பணிச்சூழலிலும் (flexible and dynamic) தொழிலாற்றுவோரைப் பாதுகாக்கும் முறையில் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

“பல இளைஞர், யுவதிகள் தங்களுடைய வருமானத்தை உறுதிப்படுத்துவதற்காகப் புதியதாக உலகில் நடைமுறையில் வந்துள்ள பொருள்களை விநியோகிக்கும் மற்றும் பிரயாணிகளை ஏற்றி இறக்கும் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இத் தொழில் முறையில் அவர்களுடைய தொழிலைப் பாதுகாக்கும் சட்டங்கள் போதியளவில் நடைமுறையில் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். 

“இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் இந்தப் புதிய தொழில்முறையில் ஈடுபடும் இளைஞர், யுவதிகள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் தாங்கள் எதிர்நோக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு சட்ட ரீதியாக கையாள்வது என்று தெரியாமல் நிர்க்கதியாகிறார்கள். இந்தத் தொழில்களை வழங்கும் நிறுவனங்களுக்குத் தமது வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் தேவை அதிகம் இருப்பதால் இத் தொழிலாளர்களின் நலனில் அதிக சிரத்தை எடுப்பதில்லை. 

“இன்று இந்தப்பிரச்சினை, சத்தம் இல்லாமல் பல இளைஞர், யுவதிகளை நிர்க்கதியாக்குகின்றது என்பதே உண்மை. இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு இந்த இளைஞர், யுவதிகளின் பங்கு மிக அவசியம் என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான தொழில் முயற்சிகள் எமது நாட்டுக்கு பல்வேறு வகையில் பயனளிக்கும் என்பதும் உண்மை. எனவே, இந்த flexible and dynamic முறையான தொழிலாளிகளைப் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் புதிய இணைப்புகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்” என, கலாநிதி ஜனகன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Riskan mohamed

No comments:

Post a Comment