(எம்.நியுட்டன்)
யாழ்ப்பாணம் மாவட்டம் அபாயகரமான மாவட்டமாக இல்லாது இருப்பது பொதுமக்களின் செயற்பாட்டில் இருக்கிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தொரிவிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அரசாங்கமும் சுகாதார துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்ரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு காலத்தில் எவ்வாறு நாம் வீடுகளில் இருக்கின்றேமோ அவ்வாறே ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவைக்கு மட்டும் வெளியேவர வேண்டும்.
எவ்வாறான சுழ்நிலையிலும் மக்கள் அரசாங்கத்தின் அறிவித்தல்களையும் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் திடமாக பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றுவதன் முலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் மேலும் அபாயமற்ற மாவட்டமாக யாழ். மாவட்டம் இருப்பதற்கு மக்களின் செயல்பாட்டில் இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment