(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை வெற்றி கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றி கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகையான கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை மாறுப்பட்ட முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.
இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உறுவெடுத்துள்ளது. சீனா - வுஹான் மற்றும் தென் கொரியாவை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். இந்நிலைமைக்கு நாமும் முகங்கொடுக்காமல், வைரஸ் பரவலை கட்டடுப்படுத்துவது அவசியமாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. இதேவேளை மூன்று மாதங்கள் வரை இறுக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்தியவசியப் பொருட்களற்ற ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தாலும், அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடை விதிப்பது முறையற்ற செயற்பாடாகும்.
இரண்டாம் உலக மகா யுத்ததின் பின்னர் உலக நாடுகள் எழுச்சி பெற்றது போன்று மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தொழிநுட்பத்தினூடாக முடியும் என்றால் தொழிநுட்ப ரீதியிலாவது மீண்டெழ முயற்சிக்க வேண்டும். இந்த செயற்பாடுகளை வெறும் வார்த்தைகளால் சாதிக்க முடியாது. செயற்பாடுகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு நான் நிதி அமைச்சராக பதவி வகித்த போது அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதுடன், இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஓய்வுதியத் தொகையையும் அதிகரித்திருந்தேன். இது புத்திசுயாதீனத்துடன் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும். அரச ஊழியர்ககளின் ஊதியத்துக்காக 90 பில்லியன் செலவிடப்படுவதுடன், இதனை தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளதால், அரசாங்கம் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
நாம் எந்த யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸை வெற்றி கொண்டாலும், பொருளாதார யுத்தத்தை வெறிறி கொள்ளாவிட்டால் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி ஏற்படும்.
குறைந்த வருமாணமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் கட்சி நிறபேதமின்றி மக்களின் நலன்புரி விருத்திக்காக வழங்கப்படும் நிதி போலவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். வங்கி கடன் தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிடாமல், நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த சழுகை கிடைக்கும் வரையில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை தோல்வியடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment