(இராஜதுரை ஹஷான்)
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டினால் எதிர்த்தரப்பினர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரவும், நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் முயற்சிப்பார்கள். தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடையாது. இதனை எதிர்த்தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டவும், அவசரகால நிலையினை பிரகடனப்படுத்தவும் எவ்வித தேவையும் தற்போது தோற்றம் பெறவில்லை. முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதை எதிர்தரப்பினர் அரசியல் பழிவாங்குல் என்கின்றார்கள். இவர் கைது செய்யப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
புலம்பெயர் தொண்டு நிறுவனங்கள் இலங்கையின் அரசியல் விவகாரத்தில் பாரிய கவனம் செலுத்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றன. இவ்வாறான அமைப்புக்களுக்கு ஆதரவாக உள்ளோர் தொடர்பான ஆதாரங்களை பகிரங்கப்படுத்துவோம்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டவும், அவசரகால நிலையினை பிரகடனப்படுத்தவும் எவ்வித தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டே எதிர்தரப்பினர் பாராளுமன்றத்தை மீள கூட்ட அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை அமைக்கும். தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்றார்.
No comments:
Post a Comment