(நா.தனுஜா)
இலங்கையிலுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக விசேட எயார் இந்தியா விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 கொரொனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத் மிஷன்' என்ற பெயரில் செயற்திட்டமொன்று இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக விசேட எயார் இந்தியா விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவுசெய்து கொண்டவர்களில், மிக அவசிய தேவையுடையோருக்கு முன்னுரிமை அடிப்படையில் (கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்கள், காலவதியான விசா உரிமையாளர்கள், மருத்துவ சேவைக்கான தேவையுடையோர் உள்ளிட்ட மேலும் சில முக்கிய காரணங்களை உடையோர்) குறித்த விமானத்தில் இந்தியாவிற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை தொடர்பான விபரங்கள் மற்றும் இந்தியாவிற்குச் சென்றதன் பின்னரான தனிமைப்படுத்தல் வசதிகள் என்பன குறித்து தமது இணையத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுமென இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
அதேவேளை இன்னமும் தம்மைப் பதிவுசெய்து கொள்ளாத இலங்கையில் உள்ள இந்தியர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment