கொரோனாவை எதிர்கொள்வதில் சர்வதேச நாடுகளிடையே ஒரு பிளவுப்பட்ட நிலையையே காணமுடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளதுடன் கொரோனாவை எதிர்கொள்வதில் சரியான தலைமை இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியே குட்டரெஸ் தெரிவிக்கையில், கொரோனாவை எதிர்கொள்வதில் சர்வதேச நாடுகளிடையே ஒரு பிளவுப்பட்ட நிலையையே காணமுடிந்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதில் சரியான தலைமை இல்லை. அங்கே தலைமைக்கு பற்றாக்குறையைத்தான் காணமுடிந்தது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் ஒன்றுபட்டிருப்பது முன் எப்போதும் விட முக்கியமானது. அதேசமயத்தில் ஒரு சரியான தலைமை இல்லாத நிலையில் அந்த இடம் பிளவுபட்டுள்ளது. தலைமை பதவிக்கும் அதிகாரத்துக்கும் இடையே ஒரு துண்டிப்பு காணப்படுகின்றது.
தலைமைத்துவத்துக்கு நாம் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளை பார்த்துள்ளோம். ஆனால் அது பொதுவாக அதிகாரத்துடன் தொடர்புடையவை இல்லாமல் இருந்தது. நாம் அதிகாரத்தை காணும் இடத்தில் சில சமயங்களில் தேவையான தலைமையை காணமுடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment