அநாதரவாக அலைந்துதிரிந்த யானைக்குட்டி மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

அநாதரவாக அலைந்துதிரிந்த யானைக்குட்டி மீட்பு

வவுனியாவில் அநாதரவாக அலைந்து திரிந்த யானைக்குட்டி ஒன்று சிவில் பாதுகாப்பு படையினரால் பிடிபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

வவுனியா பொகஸ்வெவ எனும் பகுதியிலே தாயின் துணையின்றி அநாதரவாக தேடியலைந்த ஆண் யானைக்குட்டியே நேற்று இரவு பிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த யானை நேற்றையதினம் தன் தாயினை தேடியபடி சிவில் பாதுகாப்பு படைத் தளத்திற்கு அருகில் வந்துள்ளது. இதனையடுத்து குறித்த யானைக் குட்டியினை சிவில் பாதுகாப்பு படையினர் பிடித்து வவுனியா வன ஜீவராசிகள் தினணக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைக் குட்டியை கிளிநொச்சி அல்லது அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரியை அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் யானையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment