விளையாட்டுத்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

விளையாட்டுத்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்) 

விளையாட்டுத்துறையில் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு முற்பட்ட அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். தேசிய திட்டமொன்றை வகுத்து ஒன்றினைந்து செயற்பட்டால் விளையாட்டுத் துனையினை மேம்படுத்த முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

பிரதமர் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், விளையாட்டுத்துறையில் தற்போது தோன்றியுள்ள பிரச்சினை கிரிகெட் விளையாட்டுக்கு மாத்திரம் உட்பட்டதல்ல அனைத்து விளையாட்டு துறை பிரிவிலும் பிரச்சினை காணப்படுகின்றன. 

பாடசாலை விளையாட்டு மட்டத்திற்கும், தேசிய விளையாட்டு மட்டத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றன. இதற்கு கடந்த அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். 

கிரிக்கெட் சபை பாடசாலை விளையாட்டு மட்டத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளது. இணைந்து செயற்பட்டால் மாத்திரம் துறைகளில் முன்னேற்றமடைய முடியும். 

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்து வசதியை துரிதப்படுத்த நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையினால் பல நெருக்கடிகளை வெற்றிகொள்ள முடிந்தது. 

பாடசாலை மட்டத்தில் விளையாட்டு துறையினை முதலில் பலப்படுத்த வேண்டும். தேசிய மட்ட விளையாட்டு பிரிவினையும், பாடசாலை மட்ட விளையாட்டு பிரிவினையும் ஓன்றினைப்பது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment