வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி - சட்டத்தரணி ஹபீப் றிபான்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஒரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரி பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை அறிந்து இதனை ஒரு இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

இச்சூழ்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்து பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதல் கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை சந்தித்து சட்டத்தரணி ஹபீப் றிபான் கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை இதனை இனவாத சக்திகள் ஒரு இனரிதீயான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாம் அனைவரும் தௌpவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அங்குள்ள மக்களிடம் சட்டத்தரணி ஹபீப் றிபான் வேண்டிக் கொண்டார்.

மேலும் அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும் இதனை இனப்பிரச்சினையாக காட்ட முற்படமாட்டோம் என்றும் தௌிவாக கூறியிருந்ததாகவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment