50,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

50,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

பொல்பிதிகம, நிகவெவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மாலை, இது தொடர்பாக பொல்பிதிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 13 ஐ தமது உடமையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவரின் வீட்டிலிருந்து மேலும் 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 37 மற்றும் மடிகணினியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பரகஸ்வெவ, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 17, 29 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (29) மஹவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment