முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மேன்முறையீடு தொடர்பிலான விண்ணப்பத்தில் அவரது கையெழுத்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (15) இதற்கான அனுமதியை வழங்கினார்.
அதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கு அவசியமான விடயங்களை மேற்கொள்ளுமாறு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment