ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 21, 2020

ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்) 

ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக்கோரி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரும், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் எனவும், அதன்படி ஜனாதிபதியால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஏப்ரல் 25 இடம்பெறும் என அரிவிக்கப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் தற்போது அந்த திகதி ஜூன் 20 என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது அரசியல் அமைப்பை மீறும் நடவடிக்கை எனவும் அதனால் ஜனாதிபதியின் வர்த்தமானியை வலுவற்றது என அறிவிக்குமாறும் அகில விராஜ் காரியவசம் தனது மனுவில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad