பாறுக் ஷிஹான்
ஊரடங்கு சட்டம் காரணமாக கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது வாழ்க்கையும் பாதுகாக்கக் கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் வடகிழக்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பால் வட கிழக்கு மாகாணங்களில் உள்ள கடற்தொழில் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கடலில் மீன் பிடியும் குறைந்துள்ளது.
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள கடற்பரப்பு பகுதிகளில் தற்பொழுது பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கம் கூடியுள்ளது இதனால் வட கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எல்லை மீறி மீன்பிடிக்கும் மீனவர்கள் குறித்து கடற்றொழில் அமைச்சு கவனத்திற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண மீனவர்களுக்கு பல்வேறு நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார்.
இதற்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களது வாழ்க்கை நிலை குறித்து கடற்றொழில் அமைச்சர் என்ற ரீதியில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் என மூவின மக்களும் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர் பொதுவாக இவர்களை கரிசனை எடுத்து மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நிவாரணங்களை வழங்குவதற்கு கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
தொடர்ந்தேர்ச்சியாக போடப்படும் ஊரடங்கு சட்டம் காரணமாக கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது வாழ்க்கையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment