தேர்தல்கள் ஆணைக்குழுவை வழிநடத்துபவர் ஜனாதிபதி, ஜனாதிபதியின் உத்தரவு இல்லாமல் ஒன்றும் செயற்பட முடியாது - எஸ்.லோகநாதன் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவை வழிநடத்துபவர் ஜனாதிபதி, ஜனாதிபதியின் உத்தரவு இல்லாமல் ஒன்றும் செயற்பட முடியாது - எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான்

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருக்கிறார்கள் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசிக்காமல் இவ்வாறான முடிவுகளை எடுக்க மாட்டார்கள் ஏனென்றால் தேர்தல் கள்ஆணைக்குழுவை வழிநடத்துபவர் ஜனாதிபதி. ஜனாதிபதியின் உத்தரவு இல்லாமல் ஒன்றும் செயற்பட முடியாது. ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இருக்கின்றனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடும்போது ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தலை தற்போது நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லை என்று தெரிவிக்க முடியாது இருக்கின்றனர்.

அனைத்து துறையினரும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் மக்கள் வாழ்வா சாவா என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் முடிவெடுத்தால் அவற்றை அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் அமோக வாக்குகளால் ஜனாதிபதி ஆன நீங்கள் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு தேர்தலை ஒத்தி வைத்து இருக்க வேண்டும். மக்களுக்கு இந்தத் தேர்தலை எதிர்கொள்வதில் விருப்பமில்லை மக்கள் வெளியில் செல்ல பயப்படும் காலகட்டம் மக்கள் சிறைக் கைதிகளை போன்று வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றவர்கள் சூழ்நிலைதான் காணப்படுகின்றது.

மக்களுக்கு மக்கள் சுதந்திரமான சூழ்நிலையில் சுகாதாரமான காலகட்டம் வாக்களிக்கக் கூடிய நிலைமை எப்போது ஏற்படுகிறதோ அது தேர்தலுக்கு உகந்தது சுகாதார அமைச்சு ஜனாதிபதிக்கு நாட்டில் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தெளிவுபடுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும்.

தற்பொழுது இடைக்கால அமைச்சரவையை வழிநடார்த்தக் கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. பாராளுமன்றத்தை கூட்டி அந்தப் பகுதிகள் மூலம் அங்குள்ள பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்பட முடியும்.

நிர்வாக ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை தட்டிக் கேட்பதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் அது மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதிகள் மூலமே சாத்தியப்படும் ஆதலால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் பாராளுமன்ற பிரதிநிதிகள் சம்பளத்தையும் ஓய்வூதியத்தை கடந்து நாங்கள் செய்யப்படவேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment