கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் கலந்துரையாடல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், விடுக்கப்பட்ட அழைப்பை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.
ஏற்கனவே, மக்கள் விடுதலை முன்னணியும் பங்குபற்றாது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டாரவினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு வருமாறு.
2020.05.02
விசேட அறிவிப்பு
பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலான அனர்த்தம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே அவதானமாக செயற்பட்டதோடு, ஜனவரி 24 மற்றும் பெப்ரவரி 25 ஆகிய இரு தினங்களில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தோம். ஆயினும் அரசாங்க அப்போது பொறுப்பற்ற வகையிலேயே இருந்தது.
அத்துடன் சம்பிரதாயபூர்வமான எதிர்க்கட்சியாக அல்லாது, பொறுப்புடனான மற்றும் மனித உயிரின் பெருமை அறிந்த எதிர்க்கட்சியாக நாம் தொடர்ந்து செயற்பட்டோம்.
தொற்றுநோய் அதிகரித்ததன் பின்னர் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து கலந்துரையான இரண்டு சந்தர்ப்பங்களில் பிரதமர் கட்சித் தலைவர்களை அழைத்த இரு சந்தர்ப்பங்களிலும் நாம் கலந்துகொண்டோம். தொற்றுநோயை இல்லாதொழிப்பதற்காக நாம் செயற்பட்டதோடு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்க இயந்திரத்தை உரியமுறையில் பயன்படுத்துதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை செயல்படுத்துதல் தொடர்பான எந்திரத்தை உரியமுறையில் செயற்படுத்துதல், நிவாரண நடவடிக்கை செயல்முறையை அரசியல்மயமாக்காதிருத்தல், PCR சோதனைகளை விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக நடைமுறைப் படுத்தல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சுகாதார மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை (PPE) வழகுதல் உள்ளிட்டவற்றை நாங்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினோம். இருப்பினும், அந்த யோசனைகள் மற்றும் திட்டங்கள் எதையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை என்பது தொடர்பில் நாம் வருந்துகிறோம்.
இந்த பேரழிவிலிருந்து விடுபட அரசாங்கம் எடுத்துள்ள பல நடவடிக்கைகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரவு வழங்கி வருகிறோம்.
ஆறு வாரங்களாக அரசாங்கம் சட்டவிரோத ஊரடங்கு உத்தரவை விதித்த போதிலும், கொரோனா ஒழிப்பு எனும் அத்தியாவசிய பிரச்சினை காரணமாக நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டோம்.
இருப்பினும், அரசாங்கம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஊரடங்கு உத்தரவுகளை பிழையாக பயன்படுத்தியதோடு, சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்ததோடு, தங்களது ஆதரவாளர்களுக்கு வர்த்தக ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை மற்றும் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி நிவாரண நடவடிக்கைகளை அரசியலாக்கினர்.
ஆறு வாரங்களாக மக்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதோடு, இந்த தேசிய பேரழிவை அரசாங்கத்தால் சமாளிக்க முடியும் என்று அவர்கள் நம்பியதால், அனைத்து வேதனையையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்டனர்.
ஆயினும் ஆறு வார கொவிட்19 எதிர்ப்பு நடவடிக்கையை அரசாங்கம் வென்றதாகத் தெரிகிறதா?
ஊரடங்குடனான ஆறு வாரங்களுக்குப் பிறகு, கொவிட் தொற்று குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அது தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு விதிக்கப்படாமல், சில வாரங்களுக்கு 'லொக்-டவுண்' முறைக்கு அமைய, பெரும்பாலான நாடுகள் கொவிட் நிலைமையை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வந்துள்ளன.
ஆயினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று நிலை அதிகரித்துள்ளதன் பின்னணியானது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு தீவிரமான விடயமாகும்.
"கொரோனா வைரஸ் தடுப்பு உலகின் பல நாடுகளில் உள்ள பல சுகாதார நிபுணர்களை பாதித்துள்ளது, ஆனால் இலங்கையில் உள்ள கொரோனா வைரஸ் பாதுகாப்பு படையின் சில உறுப்பினர்களை பாதித்துள்ளது. இதன் அர்த்தம் யாதெனில், கொரோன கட்டுப்பாட்டுக்காக பாதுகாப்புப் படையினர் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு உரிய தரத்திலான சுகாதார கருவிகளையோ தொற்று நோய் தொடர்பான உரிய பயிற்சியையோ வழங்காமை காரணமாக, அவ்வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர்.
இந்த அனைத்து காரணிகளையும் எதிர்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜூன் 26 ஆம் திகதி, மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு ஒன்றிணைந்த கடிதத்தை அனுப்பியிருந்தோம்.
அக்கடிதத்தை நல்ல நம்பிக்கையுடன் அனுப்பியதோடு, அதில் எந்தவொரு மறைமுகமான அல்லது நியாயமற்ற கோரிக்கையோ நாம் முன்வைக்கவில்லை.
அக்கடிதம், ஏப்ரல் 30 இற்குப் பிறகு அரசாங்க நிதிகளின் சட்டரீதியான செலவு மற்றும் கொரோனா ஒழிப்பு தொடர்பான நிதியொதுக்குவது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் அமைந்திருந்தது.
இந்த முக்கியமான கட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மாறாக மக்களின் இயல்பு வாழ்க்கைய கட்டியெழுப்புதல் மற்றம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவசியமான சட்ட ரீதியான ஒத்துழைப்பை, எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு வழங்குதல் எனும் 'எழுத்து மூலமான உத்தரவாதமும்' கூட்டுக் கடிதத்தில் காணப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த கடிதத்தை அதி மேதகு ஜனாதிபதியின் சார்பில் மதிப்பின்றிய வகையில் அவரது உத்தியோகத்தர் மூலம் அனுப்பப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.
எதிர்க்கட்சியைக் சேர்ந்த பிரதான கட்சிகளின் தலைவர்களால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அனுப்பப்பட்ட முக்கிய ஆவணத்தை, முக்கியமற்றதாக கருதி தூக்கி எறியப்பட்டது போன்றே, அவரால் அதிகாரி மூலம் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை குறிக்கிறது.
இந்த இடரான நிலையில் கட்சி பேதமின்றி செயற்படும் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு எம்மால் அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள அழகிய உள்ளடக்கம், அவராலேயே கருத்தி ற்கொள்ளப்படாத நிலையிலேயே, பிரதமரின் தலைமையின் கீழ் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் திங்கட்கிழமை (04) அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பழைய நாடாளுமன்றத்தை கூட்டுதல் மற்றும் பழைய பாராளுமன்றத்தின் 225 எம்.பி.க்களும் தேவையற்றதென அரசாங்கமும் ஜனாதிபதியும் விடாப்பிடியான ஒரு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, அரசாங்கத்தினதும் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி, இது தொடர்பான பரந்த பிரசாரத்தை வழங்கி வருகின்ற நிலையில், பிரதமரினால் 225 எம்.பிக்களையும் அழைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ள, அரசாங்கத்தின் இரட்டை வேடம் தொடர்பில் நாம் ஆச்சரியமடைகின்றோம்.
இத்தகைய சூழ்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை என்பதோடு, முன்னாள் சபாநாயகரின் தலைமையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது என்பதே, இந்நேரத்தில் செய்ய வேண்டிய மிக நடைமுறையான விடயம் என நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில்,, பாராளுமன்றத்தால் மட்டுமே அரச நிதி விடயங்களை கையாண்டு சட்டங்களை இயற்ற முடியும் என்பதனாலாகும்.
ரஞ்சித் மத்தும பண்டார
பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் சக்தி
No comments:
Post a Comment