லண்டன், அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

லண்டன், அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட விமானங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. 

அதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு நான்கு விமானங்களை பயன்படுத்தவுள்ளது. 

அதன்படி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 5 ஆம் திகதிகதி செவ்வாய்க்கிழமைகளில் குறித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமனங்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளது. 

அதே நேரத்தில் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் விமானங்கள் மே 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர் நோக்கி புறப்படும். 

குறித்த நாடுகளிலுள்ள உயர் ஸ்தானிகராலயத்துடன் வெளிவிவகார அமைச்சு இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment