மாணவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்க திட்டம் - கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

மாணவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்க திட்டம் - கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலையால் கடந்த இரண்டு மாதங்களாக அவை வழங்கப்படாத நிலையில் அதற்காக ஒதுக்கியுள்ள நிதியில் உலருணவுப் பொதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க 10 முட்டைகள், 200 கிராம் எடைகொண்ட ஆறு சமபோஷ பக்கட்டுகள், 03 பிஸ்கட் பக்கெட்டுகள், ஒரு அரிசி மா நூடுல்ஸ் பக்கெட், கடலை அல்லது கௌபி ஒரு கிலோ என அந்த உலருணவு பொதி 965 ரூபா பெறுமதியானதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள மேற்படி யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பத்திரன மேலும் தெரிவித்தார்.

அரசாந்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment