பெலாருஸ் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 277 பேர், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தில் நாட்டை வந்தடைந்தனர்.
பெலாருஸ், மின்ஸ்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானம், குறித்த இலங்கையர்களுடன் நேற்றிரவு 11.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் வருகை தந்தோரில் பெரும்பாலானவர்கள், பெலாருஸ் நாட்டில் உயர் கல்விக்காக சென்ற இலங்கை மாணவர்களாவர்.
இவ்வாறு வருகை தந்தோரும், அவர்களது பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்களா என்று பரிசோதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரால் தயார்ப்படுத்தி வைக்கப்பட்ட விசேட பஸ் வண்டியில் தனிமைப்படுத்தலுக்காக குறித்த பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்தோடு, லண்டன் மற்றும் அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகர்களிலிருந்து இலங்கை பிரஜைகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment