இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் மர்மமான முறையில் மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் மர்மமான முறையில் மரணம்

இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் வடக்கு டெல் ஆவிவ் இல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீனத் தூதுவராக இருந்தவர் டு வெய் (வயது 58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதுவராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் இஸ்ரேலின் வடக்கு டெல் ஆவிவ் இல் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் இல்லை.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா சில உண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த 2-வது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment