இலங்கையை மையமாக கொண்டு இயங்கும் ஐந்து இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

இலங்கையை மையமாக கொண்டு இயங்கும் ஐந்து இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையை மையமாக கொண்டு இயங்கும் இணையத்தளங்கள் 05 இன்று (18) காலை முடக்கப்பட்டுள்ளன. 

யுத்த வெற்றி தினத்தை காரணம் காட்டி இவ்விணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிரு நியூஸ், சீனாவுக்கான இலங்கை தூதரகம் உள்ளிட்ட 5 இணையத்தளங்கள் இவ்வாறு முடக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு இடம்பெறுவது இது மூன்றாவது தடவை என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படுவது வழமையாக காணப்படுகின்றது

யுத்த வெற்றி நினைவுதினத்தையிட்டு, உள்ளூர் இணையத்தளங்கள் 05 இன்று (18) காலை முடக்கப்பட்டுள்ளதாக, கணினி அவசர தயார்நிலை குழு/ஒருங்கிணைப்பு நிலையம் (CERT|CC) தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தினத்தில், இச்சக்தி வாய்ந்த சைபர் தாக்குதல் ஒவ்வொரு மே மாதமும் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படுவது நடைமுறையாக காணப்படுவதாக, குறித்த நிலையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்திலும் இதே தினத்தில் அரச இணையத்தளங்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இவ்வாறு முடப்பட்டதாகவும் ஆனால், இவ்வருடத்தில் 05 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad