மக்களை ஏமாற்றும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா குறித்து அமைதி - 5000 ரூபாவில் அரசியல் வேண்டாம் என்று ஆணைக்குழு கூறியதை திரிபுபடுத்தி கொடுப்பனவை இல்லாமலாக்கியுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

மக்களை ஏமாற்றும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா குறித்து அமைதி - 5000 ரூபாவில் அரசியல் வேண்டாம் என்று ஆணைக்குழு கூறியதை திரிபுபடுத்தி கொடுப்பனவை இல்லாமலாக்கியுள்ளனர்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளே பிரதானமாக முன்னெடுக்கப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே தற்போது நாட்டில் ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நூற்றுக்கு 25 வீதமானோர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். பெரும்பாலானோருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் உலக சந்தையில் எரிபொருள் விலை தராளமாகக் குறைவடைந்துள்ள போதிலும் அதன் பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எரிபொருள் விலை குறைப்பின் பயன்கள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும். 

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் அதன் விலையைக் குறைக்காமல் அதன் பயனை டின் மீன் மற்றும் பருப்பின் விலையை குறைப்பதன் மூலமாக வழங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் பருப்பு மற்றும் டின் மீனுக்கான நிர்ணய விலையும் நீக்கப்பட்டது. 

மக்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களை அரசாங்கம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தில் அரைவாசியை பொருளாதார நெருக்கடிக்கான நிதியுதவியாகக் கோருகின்றனர். அதாவது அரசாங்கம் தனது செலவை அரைவாசியாக குறைக்க முற்படுகிறது. 

மின் மற்றும் நீர் கட்டணத்தை அதிகரித்து அதன் மூலமும் அரசாங்கம் முங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முயற்சிக்கப்படுகிறது. அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லாமலாக்கப்பட்டுள்ள போதிலும் வாகனங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அமைச்சரவையில் அநாவசியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியதை திரிபுபடுத்தி கொடுப்பனவை இல்லாமலாக்கியுள்ளனர். 

அதேபோன்று மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது பேசாமலேயே உள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment