பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகின்றது, நீதிமன்றம் உரிய தீர்வினை வழங்கும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகின்றது, நீதிமன்றம் உரிய தீர்வினை வழங்கும்

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உரிய தீர்வினை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு சிலரது செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியது என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எதிர்த்தரப்பினர் மாத்திரமே தங்களின் அரசியல் தேவைகளுக்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றார்கள். 

அபிவிருத்தி அடைந்த நாடுகளை காட்டிலும் அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாடுத்தியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் முப்படையினரது ஒத்துழைப்பு ஊடாகவே சுகாதார தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். 

தற்போது கடற்படையினர் மாத்திரமே அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்படுகின்றார்கள். கடற்படையினரை கண்காணிக்க விசேட வழிமுறை செயற்படுத்தப்பட்டுள்ளன. 

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது காணப்படுகின்றது. பொதுத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் உரிய தீர்வினை வழங்கி ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. 

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைபட்சமாக காணப்படுகின்றது. இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment