5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதிலிருந்து பிரதேச, கிராம அரசியல்வாதிகளை நீக்கவும் - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதிலிருந்து பிரதேச, கிராம அரசியல்வாதிகளை நீக்கவும் - தேர்தல் ஆணைக்குழு

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிதி உதவியை எந்த விதத்திலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காக துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

5000 ரூபாய் கொடுப்பனவு திட்டங்கள் தொடர்பில் பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறும் அவர்களை இந்த திட்டங்களில் இருந்து நீக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலாளருக்கும் முக்கிய அரச அதிகாரிகளிற்கும் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழு 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இதனை தமது தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார, சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment