அமீன் எம் றிழான்
கடந்த ஒரு வருடகாலமாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் ஏழைத் தோட்டத்தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளம் 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டு வந்தார். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நாட்கூலி 1000 ரூபாய் வழங்கப்படுவதுடன் தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக குறைந்த பட்சம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. தேயிலைக்கொழுந்து பறித்தல், இறப்பர் பால் சேகரித்தல் மற்றும் அதனுடன் தொடர்பான உற்பத்திச் செயற்பாடுகளும் தொழில் பயிற்சியின் அவசியத்துடனான உழைப்புகளாகும்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தனது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து தோட்ட முதலாளிமார்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்காமை தொடர்பாக மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். மேலும் இவ்விடயம் தொடர்பாக அரச தலையீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அவர் இறந்த தினத்திலும் பிரதமருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறை ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பாரிய இலாபத்தை முகாமைத்துவக் கம்பனிகள் தனியாக அனுபவிக்க இடமளிக்காமல் குறைந்தபட்சம் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலஞ்சென்ற ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எமது ஜனநாயக இடதுசாரி முன்னணியும் ஐக்கிய தொழிலாளர் சங்கமும் மற்றும் ஜனநாயக தொழிலாளர் சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் அன்னாரின் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிற்றோம்.
No comments:
Post a Comment