சட்டமா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறக்க கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

சட்டமா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

சட்டமா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறக்க சட்டமா அதிபர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அரசாங்க புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்), சுமந்தி தர்மாவர்தன மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என PCR சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்தை திறப்பது மற்றும் அங்கு அதிகாரிகள் செல்வது ஆகியன பாதுகாப்பானதா என அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதால், சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடுவதற்கு, முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அங்கு பாதுகாப்புக் கடமையில் உள்ள ஊழியர்களுக்கு உணவும் வழங்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment